மே மாதம் 3ம் தேதி, 2018ம் ஆண்டு அன்னை தெரேசா ஸ்டார் பௌண்டேஷன் என்னும் அமைப்பு உருவானது. இரண்டு வருட காலமாக ரோட்டோர உறவுகளுக்கு, மனநலம் குன்றியோர்க்கு, ஆதரவற்ற குடும்பங்களுக்கு, கைம் பெண்களுக்கு, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு, சரியான நேரத்தில் உணவும், இருப்பிடமும் கொடுத்து குழந்தைகளை போல் பாதுகாத்து வருகின்றது நம்முடைய காப்பகம். இன்று வரை ஒரு வாடகை இல்லத்தில் 21 நபர்கள் (முதியோர், மன நலம் பாதிக்கப்பட்டோர்) உட்பட அனைவரையும் பாதுகாத்து மூன்று வேளை உணவும் வழங்க பட்டு வருகிறது. வாடகை வீடு என்பதால், அநேகருக்கு போதிய இட வசதி இல்லாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, நம் பௌண்டேஷனின் உரிமையாளர் தன் சொந்த இடத்தில் வீடு ஒன்று கட்டும் நிலை ஏற்படுகிறது. அதற்காக 22/8/2020 அன்று பூமி பூஜை நடைபெற்றது.


1 Comments
Great to see here! I have visited many times.
ReplyDelete