அந்தோணி பாக்கியராஜ் என்பவர் 04.05.1983ல் தென்காசி மாவட்டம், கருத்தப்பிள்ளையூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆவார். வறுமை காரணமாக, 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்து முடித்து, சிறு வயதிலிருந்தே சமூக தொண்டு செய்யும் ஆற்றல் படைத்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக, பதினொன்றாம் வயதிலேயே  வேலைக்கு செல்ல தள்ளப்பட்டார். பதினெட்டாம் வயதில் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஆட்டோ ஓட்டுநராக தினமும் சுமார்  85 பேருக்கு இருவேளை உணவு அளித்து, மனநலம் குன்றியோரை பராமரித்தும் வருவது போன்ற சமூக சேவையில் தன்னை அர்பணித்துக் கொண்டார். அதற்கென, மே மாதம் 3ம் தேதி, 2018ல் ஆதரவற்றோர்கென ஓர் அன்பு இல்லம் அமைக்க முயற்சித்தார். அதுவே நம் அன்னை தெரேசா ஸ்டார் பௌண்டேஷன் ஆகும்.

மேலும், தம் துணைவியாரான பாத்திமா என்பவரும் தம் கணவருடன் இப்பணியில் தன்னை மிகவும் ஈடுபடுத்திக் கொண்டார். தம் இல்லத்திற்கு வருவோரை அன்போடு வரவேற்பது, ஆர்வத்துடன் சமைப்பது, மருத்துவ உதவி அழிப்பது, பிறரோடு அன்பாக பேசுவது போன்ற நற்குணம் உடையவராவார். தம் குழந்தைகளாக, தம்  பெற்றோராக நேசித்து அவர்களை வழி நடத்தி வருகின்றனர். எவ்வளவு துன்பங்கள் நேரினும், அதனை பொருட்படுத்தாமல் இத்தூய பணியில் குடும்பமாக இணைந்து இதனை நடத்தி வருகின்றனர்.