பேரன்புடையீர்! வணக்கம்!! வாழ்க!!!

நம்முடைய தென்காசி மாவட்டம், தென்காசி தாலுகாவில் கருத்தப்பிள்ளையூர் கிராமத்தில் அன்னை தெரசா ஸ்டார் பவுண்டேஷன் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தற்போது இங்கு ஆதரவற்ற முதியோர்கள் (இருபாலரும்), ஊனமுற்ற முதியோர்கள், மற்றும் ஆதரவற்ற மாணவ, மாணவியர்கள் இங்கு கல்வி, உணவு, உடை, மருத்துவ  வசதி, உறைவிடம் அமைத்து கொடுத்து நல்ல  முறையில் அன்பு பாராட்டி, பராமரித்து, வசதிகள் அனைத்தும் செய்து மறுவாழ்வு கிடைக்க சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறோம்.

மேலும், ஆதரவற்ற குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும், கைம்பெண்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் சரியான நேரத்தில் உணவும், இருப்பிடமும் கொடுத்து குழந்தைகளை போல் பாதுகாத்து வருகின்றது நம்முடைய காப்பகம்.